முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் உடல்நலக்குறைவினால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

Advertisment

j

1996 -ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திருச்செந்தூர் தொகுதியில் இருந்து, திமுக வேட்பாளராக போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தார்.

கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க., ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக பணியாற்றியஜெனிபர் சந்திரன். தி.மு.க., மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, அ.தி.மு.க., ஆட்சியின் போது 2004ம் ஆண்டில் ஜெனிபர் சந்திரன் அ.தி.மு.க.,வில் ஐக்கியமானார். அவருக்கு அ.தி.மு.க., மாநில மீனவர் அணியின் இணைச் செயலர் பதவி வழங்கப்பட்டது. மேலும், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் பதவியும் ஜெனிபர் சந்திரனுக்கு வழங்கப்பட்டது. இதன் பின்னர் 2010ல் மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து ஜெனிபர் சந்திரன் நீக்கப்பட்டார்.