Skip to main content

''இது முடிவல்ல ஆரம்பம்'' -ஜெ.வின் போயஸ் இல்லம் அரசுடைமை ஆக்கியதற்கு ஜெ.தீபா எதிர்ப்பு...

Published on 25/07/2020 | Edited on 25/07/2020

 

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியுள்ளது. தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன், மகள் ஆகிய இருவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 

 

இவர்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, தமிழக அரசு தற்போது அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளது. 

 

J.Deepa comments on the state ownership of J.'s Boise House


இந்நிலையில் இது குறித்து ஜெ.தீபா, “இது முடிவல்ல ஆரம்பம், தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்துவேன். வேதா இல்லத்தை விட்டு தரவேண்டும் என ஜெயலலிதா நினைக்கவில்லை. அதிமுக தலைமை அலுவலகத்தை நாங்கள் எடுத்து கொண்டோமா அல்லது வழக்கு தொடர்ந்தோமா. ஜெயலலிதாவின் மரணம் எதிர்பாராதது இல்லையெனில், உயில் எழுதி வைத்திருப்பார். வேதா இல்லத்தை கோயிலாக நினைக்கலாம் ஆனால் கோவிலாக மாற்ற முடியாது. அரசின் நடவடிக்கை அத்துமீறிய செயல். அரசின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். ஜெயலலிதாவால் வாங்கப்பட்ட கடனுக்கு நாங்கள் பொறுப்பேற்று உள்ளோம். ஜெயலலிதா குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்தும் வேதா இல்லத்தில் தான் நடந்தன. இல்லத்தில் உள்ள பொருட்களை நீதிமன்றத்தில் அரசு ஒப்படைத்து இருக்க வேண்டும்'' எனக்கூறியுள்ளார்.

 

அதேபோல் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்பது மக்களின் எண்ணம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், கடமையும், உரிமையும் உள்ள நாங்கள் தமிழக மக்களின் எண்ணத்தை நிறைவேற்றி உள்ளோம்.


ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற முடியாத நிலை ஏற்பட்டால் வரலாறு எங்களை  சபிக்கும். வரலாறுகளை மாற்றி எழுதவும் கூடாது, திருத்தம் கூடாது என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் வேதா இல்லம் ஒன்றும் கிஃப்ட் என ஜெ.தீபா நினைக்க வேண்டாம் என கூறிய அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி, ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடைமையாக்கியது மகிழ்ச்சியான அறிவிப்பாகும் என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வடசென்னையில் வேட்புமனு தாக்கலின் போது நடந்தது என்ன? - ஜெயக்குமார் விளக்கம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Jayakumar has told what happened while filing nomination in North Chennai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று தமிழகத்தின் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், வடசென்னை தொகுதி வேட்புமனு தாக்கலின் போது திமுக, அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமியும், அதிமுக சார்பில் மனோவும் போட்டியிடுகின்றனர். அதனால் இருவரும் இன்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த நிலையில், திமுகவிற்கு 2 ஆம் நம்பர் டோக்கனும், அதிமுகவுக்கு 7 ஆம் நம்பர் டோக்கனும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இருவரும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் யார் முதலில் தாக்கல் செய்வது என்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

டோக்கன் வரிசைப்படி நாங்கள் தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வோம் என்று அமைச்சர் சேகர் பாபுவும், முதலில் நாங்கள் தான் வந்தோம் அதனால் எங்களுக்குத்தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் நேரடியாக வந்து டோக்கன் வாங்கியதாகவும், ஆனால் திமுக பினாமி மூலம் டோக்கன் வாங்கியதாகவும் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதனால் அங்கு திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதியாக அதிமுகவினர் முதலில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்தில் 5 பேர் மட்டுமே அனுமதி., ஆனால் திமுக சார்பில் அமைச்சர் சேகர் பாபு, வேட்பாளர், மேயர் பிரியா உள்ளிட்ட 20 பேரை அலுவலகத்திற்கு உள்ளே அனுமதித்துள்ளனர். நான் முதலில் இங்கே வந்தேன் அப்போது, வேட்புமனு டோக்கன் கேட்டேன். ஆனால் அலுவலர் வேட்பாளரிடம் தான் டோக்கன் வழங்குவோம் என்று தெரிவித்தார். நானும் சரி என்று வந்துவிட்டேன். ஆனால், எங்கள் வேட்பாளர் மனோ வந்தவுடன் 7 ஆம் நம்பர் டோக்கன் வழங்கப்பட்டது. எங்களுக்கு பிறகுதான் திமுக வேட்பாளர்கள் வந்தார்கள் அவர்களுக்கு 8 ஆம் நம்பர் டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் எங்களுக்கு முன்பு வேட்பு மனு தாக்கல் செய்ய முயன்றனர்.

திமுகவினர், வேட்பாளர்கள் வருவதற்கு முன்பே டம்பி வேட்பாளர் மூலம் 2 ஆம் நம்பர் டோக்கன் வாங்கியுள்ளனர். அதனால் நாங்கள் தான் முறையாக வந்தோம்; நாங்கள் தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வோம் என்றோம். ஆனால் திமுகவினர் தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்ய முயன்றனர். பின்பு தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் நடந்ததை கூறினார். பின்பு தலைமை தேர்தல் அதிகாரி, முதலில் அதிமுக தான் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார். அதன்பிறகு நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்தோம். ஆனால் அமைச்சர் சேகர்பாபு உள்ளே இருந்த தேர்தல் அதிகாரிகளை மிரட்டினார்” என்றார்.

Next Story

மீன்வளப் பல்கலைக்கழகம்; ஜெயலலிதாவின் பெயரை நிராகரித்த குடியரசுத்தலைவர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
President rejects Jayalalitha name for Fisheries University

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.

நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின் போது நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று  சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுக்கும் மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுடன் ஜெயலலிதா பெயர்மாற்றம் தொடர்பான மசோதவையும் திருப்பி அனுப்பியிருந்தார். இதையடுத்து தமிழக அரசு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைகழகத்திற்கு ஜெயலலிதா பெயர் மாற்றம் தொடர்பான பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.