Advertisment

ஜெ.சி.பி. மூலம் நசுக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள்!

jcp

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மதுவிலக்கு பிரிவு போலீசார் நீதிமன்ற உத்தரவுபடி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பண்டல் பண்டலாக கொண்டுவந்து கீழே கொட்டி ஜெ.சி.பி. இயந்திரத்தை அதன் மீது ஏற்றி தூள் தூளாக நசுக்கப்பட்டன.

Advertisment

புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்களை திண்டிவனம் பகுதிக்கு அவ்வப்போது கடத்தி வருவார்கள். அதை கண்டறிந்தமதுவிலக்கு போலீசார், வாகன சோதனை மூலம் பறிமுதல் செய்து வழக்கு போடுவார்கள். இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன்மூலம் பறிமுதல் செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட பண்டல்ககளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் வழக்கு முடியும் வரை போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டு இருந்தது.

Advertisment

தற்போது நீதிமன்ற உத்தரவின்படி, பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் நீதிமன்ற அலுவலர்கள் முன்பு கொட்டி அழிக்கப்பட்டன. தரையில் கொட்டப்பட்ட மதுபானப் பாட்டில்கள் மீது ஜெ.சி.பி. இயந்திரத்தை ஏற்றி தூள்தூளாக அழிக்கப்பட்டன.

liquor police Seized Tindivanam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe