ADVERTISEMENT

ஹைட்ரோ கார்பனை எதிர்க்காத எம்.எல்.ஏ, எம்.பிக்களின் வீடுகளை முற்றுகையிடுவோம்; பேரா.ஜெயராமன் ஆவேசம்

03:35 PM May 21, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுப்பதற்கு குரல் கொடுக்காத எம்,பி. எம்,எல்,ஏ,க்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அறிவித்திருக்கிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன்.

ADVERTISEMENT

காவிரிப் படுகையை சமீபகாலமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் வெடித்த வண்ணம் இருக்கிறது. விவசாயிகள் வயல்களிலும், குளங்களிலும், ஆறுகளிலும், கழிவுநீரிலும் இறங்கி பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதற்கு நிகராக பெண்களும் கோயில்களில் வழிபாடு நடத்துவதும், மக்கள் கூடும் இடங்களில் ஒப்பாரிவைத்து விழிப்புனர்வு ஏற்படுத்துவதுமாகவும்,அரசியல் கட்சிகள் மனித சங்கிலி போராட்டம் சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்ட அதற்கான வேலைகளை செய்துவருகின்றனர்.

இந்த நிலையில் மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமனும் ஒருபுறம் மக்களை திறட்டி போராடிவருகிறார், அவர் "காவிரிப்படுகை மிகப்பெரிய ஆபத்தில் இருக்கிறது. மூன்று சுற்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஒட்டுமொத்த பகுதியும் அழியப்போகிறது. முதல் சுற்றில் 5 ஆயிரத்து 94 சதுர கிலோமீட்டரில் 341 எண்ணெய் கிணறுகள் அமைகின்றன.

67 கிணறுகள் ஒ,என்,ஜி,சியியும், 274 கிணறுகள் வேதாந்த நிறுவனத்துக்கும் சுற்றுச்சூழல் ஆய்வுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் காவிரிப்படுகையை ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட உள்ளது. இந்ததிட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று எல்லாக் கட்சிகளும் கூறியுள்ளனர். ஆனால் ஹைட்ரோகார்பன் சுற்றுச்சூழல் அனுமதி அளித்தவுடன் புதுச்சேரி முதல்வர் அந்த திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துவிட்டார். ஆனால் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து முதல்வர் பழனிசாமி மௌனமாக இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹைட்ரோகார்பன் திட்டத்தின் பாதிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வரும் 28ஆம் தேதி முதல் பரப்புரை பயணம் நடத்தப்பட இருக்கிறோம். மேலும் விவசாயிகள் நிலம் தர மறுக்கும் இயக்கத்தையும் தொடங்க உள்ளோம். பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த குரல் கொடுக்காத எம்பி எம்எல்ஏக்கள் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத்திட்டமிட்டுள்ளோம். எதிர்காலத் தமிழகம் என்பது கார்ப்பரேட்டுகளுக்கு அல்ல தமிழக மக்களுக்கு ஆனது என்பதை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஆர்டிஓ அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவோம்" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT