Advertisment

ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்!

Jayaraj Phenix appeared in Madurai court

Advertisment

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவல்துறையினரும் இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்

.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில், தந்தை மகன் கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. இதன் காரணமாக, மதுரை மத்திய சிறையில் உள்ள கொலைக்குற்றம் சாட்டப்பட்ட 9 காவல்துறையினருக்கும் சம்மன் வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து வழக்கின் குற்றப்பத்திரிகை நகலைப் பெற்றுக் கொள்வதற்காக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர்கள் முருகன், முத்துராஜா, தாமஸ் பிரான்சிஸ், காவலர்கள் சாமத்துரை, வெயில் முத்து, செல்லத்துரை ஆகிய ஒன்பது பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்போடு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

sathankulam highcourt madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe