
தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் துறை செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டு நேற்று தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. குறிப்பாக தமிழகத்தின் மருத்துவத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், கூட்டுறவு உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தார். தமிழகத்தின் புதிய மருத்துவ செயலாளராக செந்தில்குமார் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த உதயனை இன்று வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குநராக நியமித்துள்ள தமிழக அரசு, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக ஜெயந்தியை நியமனம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதேபோல் தமிழக சுற்றுச்சூழல் துறையின் இயக்குநராக தீபக் பில்கியை நியமனம் செய்து தமிழக வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)