Advertisment

ஜெயஆனந்த் பிறந்த நாள்! ஆடம்பரம் வேண்டாம்.... திவாகரன் கட்டளை! 

jeya ananth

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

அம்மா அணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திவாகரன் மகனும் போஸ் மக்கள் பணியகம் தலைவருமான ஜெய ஆனந்தின் பிறந்த நாள் மே 16 ந் தேதி. வழக்கமாக பிரமாண்டமாக கொண்டாடப்படும். ஆனால் இ்ந்த பிறந்தநாளை ஆடம்பரமின்றி கொண்டாட வேண்டும் என்று திவாகரன் மகனுக்கு கட்டளையிட்டுள்ளார்.

கார்டனில் இருந்த சசிகலாவின் கீழ் திவாகரன், தினகரன் என்று ஒட்டுமொத்த மன்னார்குடி குடும்பமும் ஆடம்பரத்துக்கு பஞ்சமில்லாமல் விழாக்களை கொண்டாடினார்கள். கடந்த ஆண்டு ஜெயஆனந்த் பிறந்த நாளுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் அரசியல்வாதிகள் அமைச்சர்களின் உதவியாளர்கள் வந்து பரிசுகளை கொடுத்து வாழ்த்தி சென்றனர். ஆனால் இந்த பிறந்த நாளுக்கு சில நாட்களே இருக்கும் போதே வக்கீல் நோட்டிஸ் வரை அனுப்பி குடும்ப உறவில் விரிசலை உண்டாக்கிவிட்டார்கள். இந்த விரிசலுக்கு தினகரன் தான் காரணம் என்று திவாகரன் தரப்பினர் எண்ணுவதால் இனி சசிகலா தினகரன் யாருடனும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று வெளிப்படையாக பேட்டி கொடுத்தார்.

Advertisment

je ana

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

வழக்கமாக ஜெய ஆனந்த் பிறந்த நாளுக்காக பதாகை வைத்து பரபரப்பு ஏற்படும். ஆனால் இந்த பிறந்த நாளை பரபரப்பு ஆடம்பரம் இல்லாமல் கொண்டாட வேண்டும் என்று திவாகரன் கட்டளையிட்டுள்ளார்.ஆனாலும் வாழ்த்துச் சொல்ல கடந்த ஆண்டு வந்தவர்கள் கூட இந்த ஆண்டு வாழ்த்த வருவார்களா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

divakaran birthday Jayantha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe