ariyalur

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது ஸ்ரீ புரந்தான் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் 36 வயதுள்ள முத்துசாமி. இவருக்கும் அருண்மொழி கிராமத்தைச் சேர்ந்த 26 வயது ஆனந்திக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த படி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஐந்து வயதில் ஜனனி என்ற பெண் குழந்தையும், 2 வயதில் கதிரவன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

Advertisment

கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. சண்டைகள் சச்சரவுகள் இவை பெரிதாகி கணவரை விட்டுவிட்டு குழந்தைகளுடன் சில நாட்களுக்கு முன்பு ஆனந்தி தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். சில நாட்கள் மனைவி பிள்ளைகளைப் பிரிந்து இருந்த முத்துசாமி மனம் மாறி மாமியார் வீட்டிற்கு சென்று மனைவி ஆனந்தியுடன் சமாதானம் பேசினார்.

Advertisment

அதன்படி இனிமேல் குடும்பத்தில் பிரச்சனை வராமல் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்வோம் என்று மாமியார் மாமனார் முன்னிலையில் பேசி சமாதானமாகி மனைவியையும் குழந்தைகளையும் தன் ஊரான ஸ்ரீபுரம்தான் கிராமத்திற்கு அழைத்து வந்தார்.

வந்து சில நாட்கள் கணவன் மனைவி இருவரும் பிள்ளைகளுடன் சந்தோஷத்துடன் வாழ்ந்தனர். தம்பதிகளுக்குள் மீண்டும் சண்டை சச்சரவு வர ஆரம்பித்தது. சம்பவத்தன்று ஆனந்தி மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். மனைவி இறந்ததை அறிந்த முத்துசாமி அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவன் மனைவி இருவரும் குடும்ப சண்டை காரணமாக இறந்து போன சம்பவம் ஸ்ரீபுரந்தான் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுசம்பந்தமாக விக்ரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து கணவன் மனைவி இருவரும் இறந்தது சம்பந்தமாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Advertisment