Advertisment

உயிரிழந்த ரசிகரின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய ஜெயம் ரவி! (படங்கள்)

விபத்தில் உயிரிழந்த தனது ரசிகர் மன்ற தலைவரின் இல்லத்திற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ஜெயம் ரவி, ரசிகரின் குழந்தையின் கல்விச் செலவை ஏற்பதாக உறுதியளித்துள்ளார்.

Advertisment

மதுரை மாவட்டம், நிலையூரைச் சேர்ந்த செந்தில் என்பவர், ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தின் மாவட்டத் தலைவராக இருந்து வந்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக நடிகர் ஜெயம் ரவியின் தீவிர ரசிகராக இருக்கும் இவர், அண்மையில் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தார். தனது ரசிகரின் மறைவு குறித்து செய்தியறிந்த நடிகர் ஜெயம் ரவி, மதுரையில் உள்ள செந்திலின் வீட்டிற்கு நேரில் சென்று அவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினார்.

Advertisment

பின்னர், செந்திலின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறிய ஜெயம் ரவி, செந்திலின் குழந்தைகளுக்கான படிப்புச் செலவு முழுவதையும் தானே ஏற்பதாக உறுதியளித்துள்ளார்.

actor jayam ravi madurai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe