தந்தை பெரியார் கொண்டு வந்த திராவிட கொள்கைகளை அப்படியே பின்பற்றி நடந்தவர் ஜெயலலிதா என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தேனியில் மானிய விலையில் அம்மா ஸ்கூட்டி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பயனாளிகளுக்கு ஸ்கூட்டிகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது,

Advertisment

மறைந்த முதல்வர் பெண்கள் உரிமைக்காக போராடியவர். அவர் பெண்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்தார். பெண் சிசு கொலை தடுப்பதற்காக தொட்டில் குழந்தை திட்டத்தை அறிமுகப்படுத்தி பெண்களின் வாழ்வில் ஒளியேற்றியவர். தந்தை பெரியார் கொண்டு வந்த திராவிட கொள்கைகளை அப்படியே பின்பற்றி நடந்தவர் ஜெயலலிதா. அதனால்தான் பல்வேறு நல்ல திட்டங்களை மக்களுக்காக செயலாற்றினார்.

ஆரம்ப காலத்தில் வாகனங்களில் பெண்கள் தங்களது சகோதரர்களின் பின்னால் அமர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. தற்போது பெண்களின் பின்னால் சகோதரர்கள் அமரும் நிலை உருவாகியுள்ளது என அவர் கூறினார்.