Advertisment

‘ஜெ’ நினைவிடம் திறப்பு... நெரிசலில் சிக்கி மயங்கிய தொண்டர்கள்! (படங்கள்)

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை இன்று (27.01.2021) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

Advertisment

மெரினாவில் 50,422 சதுர அடியில், 80 கோடி செலவில் ஃபீனிக்ஸ் பறவையின் வடிவத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம், இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத் திறப்பு விழாவில் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisment

கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் கூடியுள்ளதாலும், தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருவதாலும் ஜெயலலிதா நினைவிடம் செல்லும் வழியில் கூட்ட நெரிசல் அதிகரித்தது. நெரிசலின்காரணமாக அ.தி.மு.க. தொண்டர்கள் சிலர் மயக்கம் அடைந்தனர். நெரிசலில் சிக்கியவர்களைக் காவல்துறையினர் மீட்டு முதலுதவி செய்தனர்.

admk Jayalalithaa marina beach
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe