Skip to main content

ஜெ., சொத்துக்களுக்கு நிர்வாகியை நியமிக்கக்கோரிய வழக்கு - ஜூன் 6ல் தொடங்குகிறது இறுதி விசாரணை 

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க, தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி அதிமுக உறுப்பினர்கள் புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.  அம்மனுவில், ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமை ஜெ.தீபா, தீபக் ஆகியோருக்கு கிடையாது எனவும் கூறியுள்ளனர்.

 

j


இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமை தனது கட்சிக்காரருக்கே இருப்பதாக கூறினார். அதிமுக உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பின்னர், வருமான வரித்துறை சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  வேறு ஒரு வழக்கில் ஜனவரி 24ல் தாக்கல் செய்த அதே அறிக்கையை, இந்த வழக்கிலும் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், ஜெயலலிதா செல்வ வரி ரூ.10.12 கோடியும், வருமான வரி ரூ.6.62 கோடி பாக்கி வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இவ்வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை ஜூன் 6-ம் தேதி தொடங்கும் என தெரிவித்தனர் நீதிபதிகள்.
 

சார்ந்த செய்திகள்