Advertisment

ஜெயலலிதா பிறந்தநாள் - தமிழக அரசு சார்பில் நாளை மரியாதை!

ிுப

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக நாளை அவரின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட இருக்கிறது. ஜெயலலிதாவின் 74வது பிறந்த தினம் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் இதனைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் இன்று முதலே பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட தோல்விகளை மறந்து தங்கள் தலைவியின் பிறந்தநாளுக்கான ஏற்பாடுகளை அதிமுக நிர்வாகிகள் இன்று காலை முதலே ஆரம்பித்துள்ளனர். நாளை அன்னதானம், நலத்திட்ட உதவி, கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற இருக்கிறது.

Advertisment

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட அதிமுக செயலாளர்கள் செய்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த வருடம் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவின் பிறந்த தினம் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை தமிழக அரசு சார்பில் ஜெயலலிதா புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கலந்துகொள்ள வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

admk jayalalitha
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe