முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016 டிசம்பர் 5ம் தேதி காலமானார். அதைத்தொடர்ந்து அவர் மரணம் குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

Advertisment

jayalalitha

இதைத்தொடர்ந்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017 செப்டம்பர் மாதம் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் கடந்த 2 ஆண்டுகளாக ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் மேலும் 4 மாதங்களுக்கு விசாரணைக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக அரசு வழங்கியுள்ளது.