Published on 21/06/2022 | Edited on 21/06/2022

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் புதிதாகத் தனி அமைப்பு ஒன்றைத் துவக்கியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமாகும் வரை அவரது உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன் சங்கரலிங்கம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அரசியலிலிருந்து ஒதுங்கி, ஆன்மிக பாதையில் முழு நேரமாகப் பயணித்து வந்தார். தனது முகநூல் பக்கத்தில், அடிக்கடி அரசியல் குறித்த கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில், தற்போது 'அம்மா ஆன்மிக பேரவை' என்ற புதிய அமைப்பைத் தொடங்கி உள்ளார்.
இந்த அமைப்பு முழுக்க, முழுக்க ஆன்மிகம் தொடர்பானது. இதில் அரசியல் இருக்காது என்று பூங்குன்றன் கூறியுள்ளார்.