
தமிழக முன்னாள் முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை(5.12.2024) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி கடலூர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சிதம்பரம் வண்டிகேட்டில் உள்ள அவரது சிலைக்கு சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதேபோல் அவரது சிலைக்கு அருகே உள்ள எம்ஜிஆர் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோர் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கட்சியின் அமைப்பு செயலாளர் முருகுமாறன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட கட்சி அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், அம்மா பேரவை துணை செயலாளர் பாலமுருகன் முன்னாள் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் சுந்தர், இணை செயலாளரங்கம்மாள், உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பொதுமக்கள் அதிமுகவினர் என 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.