கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இரவு ஜெயலலிதா மரணம் அடைந்தார். இன்று ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனால் அதிகாலை முதலே தமிழகம் முழுவதிலுமிருந்து வந்த அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், ஆணாதிக்கம் மிகுந்த அரசியல் உலகில் ஒரு பெண் வாழ்வது சாதாரண விஷயமல்ல. சவால்களை எதிர்கொண்டு அதை வெற்றிகரமாகச் செய்தவர் ஜெயலலிதா. அவரது இறுதி நாட்களின் குறித்து நிலவும் மர்மம் துரதிருஷ்டவசமானது என்று கனிமொழி பதிவிட்டுள்ளார்.