ADVERTISEMENT

அரசுடைமையான 'ஜெ'வின் போயஸ் இல்லம்... ஜெ.தீபா வழக்கில் இன்று  இடைக்கால தீர்ப்பு! 

01:53 PM Jan 27, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்க கையகப்படுத்தும் உத்தரவை எதிர்த்து ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் இன்று (27.01.2021) மதியம் உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்காக, 24 ஆயிரம் சதுர அடி பரப்பு கொண்ட ‘வேதா நிலையம்’ அமைந்துள்ள இடத்துக்கு 68 கோடி ரூபாய் இழப்பீடு நிர்ணயித்து, நிலம் கையகப்படுத்தும் அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின்படி, 68 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தி, ‘வேதா நிலையம்’ இல்லத்தை அரசுடைமையாக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனையடுத்து, கையகப்படுத்தும் நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி தீபக் தரப்பிலும், இழப்பீடு நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தீபா தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்குவது மற்றும் கையகப்படுத்தும் உத்தரவை எதிர்த்து ஜெ.தீபா, ஜெ.தீபக் தொடர்ந்த வழக்கில் இன்று மதியம் உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

இந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி சேசஷாயி இடைக்கால உத்தரவை பிறப்பிக்க இருக்கிறார். வேதா இல்ல பொருட்களை முழுமையாக மதிப்பீடு செய்யாமல் அவசரமாக கையகப்படுத்தியுள்ளனர் என வழக்கை தொடர்ந்த ஜெ.தீபக் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT