ஜெயலலிதாவின் இல்லத்தை அரசு நினைவிடமாக்க ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. சென்னை மாவட்ட கலெக்டர் அந்தக் கூட்டத்தை போயஸ் கார்டனில் நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், அண்ணன் மகள் தீபா ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. அவர்களை கூப்பிடாமல் என்ன ஆலோனை கூட்டம் இது என அவர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
கூடிய விரைவில் ஜெயலலிதாவின் இல்லத்தை அரசு நினைவிடமாக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து, அதற்கான அறிவிப்பை அவர் விரைவில் வெளியிட இருப்பதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.