சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை, ஜெயலலிதா நினைவிடமாக்குவதை எதிர்த்து ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். மேலும் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள இல்லத்தை 35 கோடி மட்டுமே அரசு வாங்கு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகிகளை நியமிக்கக் கோரிய வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

Advertisment

QUESTION

அப்போது நீதிதமன்றம், ஜெயலலிதா நினைவிடத்தை மக்கள் பணத்தில் அமைக்க வேண்டிய அவசியம் என்ன? கோடநாட்டில் ஜெயலலிதா தங்கினார் என்பதற்காக அதையும் நினைவு இல்லமாக மாற்றுவீர்களா? ஜெயலலிதா பெயரை நிலைக்கச் செய்ய பல்வேறு வழிகள் உள்ளன. அமைச்சர்கள் தினமும் ஜெயலலிதாவின் புகழைத்தான் பாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று நீதிமன்றம் கூறியது.

மேலும் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் ஜூலை 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.