Advertisment

ஜெ. நினைவிடத்திற்கு ஒரு கூடை மாம்பழங்களுடன் சென்ற விந்தியா!

தேர்தல் காலங்களில் அதிமுகவின் நட்சத்திர பேட்சாளராக வலம் வருபவர் நடிகை விந்தியா. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவ்வப்போது சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருவார் விந்தியா.

Advertisment

actress Vindhya

இந்த நிலையில் புதன்கிழமை மாலை சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்ற விந்தியா, அங்கு மரியாதை செலுத்தினார். மேலும் ஒரு கூடை மாம்பழங்களை ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்து வணங்கினார்.

ஜெயலலிதா இருக்கும்போது ஆண்டுதோறும் போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்து மாம்பழ சீசனில் மாம்பழம் தருவது விந்தியாவின் பழக்கமாக இருந்தது. அவரது மறைவுக்கு பிறகும் மாம்பழ சீசனில் அவரது நினைவிடத்தில் மாம்பழங்களை வைத்து வணக்க புதன்கிழமை இரவு வந்துள்ளார்.

Vindhya Actress Chennai merina jayalalitha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe