மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. நாகை நகர கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் அதிமுகவை சேர்ந்த 500க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
பொதுக் கூட்டத்திற்கான அழைப்பிதழில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபாலின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயபாலின் ஆதரவாளர்கள் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே ஏன் முன்னாள் அமைச்சர் பெயரை போடவில்லை? அவரை வேண்டும் என்றே புறக்கணிக்கிறீங்களா? அவர் பெயரை நீக்கிவிட்டு அவரது ஊரில் பொதுக்கூட்டமா? நாங்கள் கூட்டத்தை நடத்தவிடமாட்டோம் என தகராறில் ஈடுபட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Nagapattinam 01_0.jpg)
அங்கு ஏற்கனவே பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டிருந்த காக்கிகள் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட துணை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், தலைமையிலான போலீசார் ஜெயபால் ஆதரவாளர்கள் 15 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
இதற்கிடையில் ஓ.எஸ்.மணியன் ஆதரவாளர்களுக்கும், ஜெயபால் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Nagapattinam 02.jpg)
கூட்டத்தில் பேசிய அமைச்சர் மணியன், திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துப் பேசிவிட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு காரில் புறப்பட்டு சென்றார்.
நாகையில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow Us