j

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் அரசு சார்பில் நினைவிடம் கட்ட அனுமதி அளிக்கக்கூடாது என்று எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் மீது இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் , ராஜமாணிக்கம் ஆகியோர் தீர்ப்பளித்தனர்.

Advertisment

’ஜெயலலிதா மறைந்ததால் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக கருத முடியாது. ஆகவே, அரசு சார்பில் மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க தடையில்லை என்றும், தலைவர்களுக்கு நினைவிடம் அமைப்பது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்றும் தீர்ப்பளித்த நீதிபதிகள், ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

Advertisment