ADVERTISEMENT

ஜெயலலிதா நினைவிடம் கட்டுமான பணி தொடங்கியது (படங்கள்)

03:40 PM Jun 13, 2018 | rajavel

ADVERTISEMENT

ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5-ல் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரை எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ரூ.50.8 கோடி செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. கடந்த மே 7-ந்தேதி நினைவிடத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.

ADVERTISEMENT


பீனிக்ஸ் பறவை வடிவத்தில் பல்வேறு கலை அம்சங்களுடன் ஜெயலலிதா நினைவிடம் உருவாக்கப்படுகிறது. தற்போது ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மண்டபத்துக்கான தூண்கள் அமைப்பதற்காக புல்டோசர் மற்றும் எந்திரங்கள் மூலம் துளையிடும் பணிகள் நடக்கிறது.


10-க்கும் மேற்பட்ட புல்டோசர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையொட்டி ஜெயலலிதா சமாதிக்கு சென்று பார்வையிட தடை செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5-ல் நினைவிடத்தை திறப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT