திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் சரவணனும், அதிமுக சார்பில் முனியாண்டி உட்பட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்‌, நாம் தமிழர் கட்சி‌ உள்பட சில கட்சிகளும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் களமிறங்கி இருக்கிறார்கள்.

Advertisment

DMK

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த நிலையில் திமுகவேட்பாளர் சரவணனை ஜெ. ஆசிர்வதிப்பதுபோல் பிளக்ஸ் பேனர் படம் பேஸ்புக்கிலும், வாட்சப்பிலும் உலாவி வருகிறது. அதில் அண்ணா கலைஞருடன் தலைவர் ஸ்டாலின் படத்தையும் போட்டு அதில் ஜெயலலிதா படத்தையும் பெரிய சைஸில் போட்டு" என் ஆசையும் என் அன்பும் உங்களோடு தான் துரோகிகளை தோல் உரியுங்கள்" என பெரிய சைஸில் எழுதப்பட்டு அதற்குக் கீழ் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி திமுக வெற்றி வேட்பாளர் என்று எழுதப்பட்டு திமுக வேட்பாளர் சரவணன் படமும் கையெடுத்து கும்பிடுவது போல் போடப்பட்டு இருக்கிறது.

இது திமுக, அதிமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisment