evks-jayakumar

Advertisment

அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறையில் கம்பி எண்ணுவர் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

சென்னை மாதவரம் பகுதி காங்கிரஸ் சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழா புழல் காவாங்கரை, பிள்ளையார் கோயில் தெருவில் கொண்டாடப்பட்டது. இதில் ஈவிகேஎஸ். இளங்கோவன் கலந்து கொண்டார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

அப்போது பேசிய அவர், காமராஜர் மறைந்தபோது, அவரிடம் 11 ரூபாய்தான் இருந்தது. ஆனால், முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதாவிடம் எவ்வளவு கோடிகள், பங்களாக்கள், சொத்துக்கள் இருந்தன என்பது அனைவருக்கும் தெரியும். மதம், ஜாதி, மொழிகளுக்கு அப்பாற்பட்டவர் காமராஜர்.

இங்குள்ள ஏழைகளை பற்றி பிரதமருக்கு கவலையில்லை. தமிழக அமைச்சர்கள் ஊழலிலேயே மூழ்கி குளித்து வருகின்றனர். ஜெயலலிதா இருக்கும்வரை வாய் திறக்காத அமைச்சர் ஜெயக்குமார், கடந்த சில மாதங்களாக அடாவடியாக பேசி வருகிறார். காங்கிரஸ் கட்சியை முற்றிலும் ஒழித்துவிட்டதாக கூறும் ஜெயக்குமார், இங்குள்ள புழல் சிறையில் விரைவில் சிறைக்கம்பியை எண்ணுவார் என்றார்.