Advertisment

13 நாட்கள் ஆகியும் முன்னேற்றம் இல்லாத ஜெயக்குமார் மரண வழக்கு; காவல்துறை எடுத்த முடிவு

Jayakumar case with no progress after 13 days; A decision taken by the police

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவரான ஜெயக்குமாரை தீவிரமாக தேடி வந்தனர். இத்தகைய சூழலில் ஜெயக்குமார் கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் 04.05.2024 அன்று சடலமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

இந்தச் சம்பவம் கொலையா தற்கொலையா எனப் பல்வேறு கட்டங்களில், பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடத்தப்பட்டு பல்வேறு தகவல்கள் செய்திகளாகவும் வெளியாகி வருகிறது.சம்பவம் நடந்து 13 நாட்களுக்கு மேலாகியும் தற்போது வரை இந்த சம்பவம் குறித்து உறுதியான முன்னேற்றம் எதுவும் இல்லாத நிலையில் புதிய அதிகாரிகளை வழக்கு விசாரணையில் சேர்த்துள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஏற்கனவே ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக விசாரிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுடி.என்.ஏ டெஸ்ட், உடற்கூறாய்வு முடிவுகள் எனஅறிவியல் பூர்வமான விசாரணைகள் நடைபெற்று வருவதாக ஏற்கனவே செய்தியாளர்களை சந்தித்திருந்தநெல்லையின் தென்மண்டலஐ.ஜி.கண்ணன் தெரிவித்திருந்த நிலையில், ஏற்கனவே அமைக்கப்பட்டதனிப்படையில் கூடுதலாக புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

case police congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe