Advertisment

விண்ணைத்தொட்ட மல்லிகை பூ விலை!

Jasmine Flower Price

Advertisment

தொடர் மழை காரணமாகவும், மலர் வரத்துக் குறைவு காரணமாகவும் மல்லிகைப் பூவின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

தற்போது மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை வரலாறு காணாத அளவிற்கு 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாட்டுத்தாவணி மலர் சந்தையில் கனகாம்பரம் பூ கிலோ ஒன்றுக்கு 2,000 ரூபாய்க்கும், முல்லைப்பூ கிலோ ஒன்றுக்கு 1,500 ரூபாய்க்கும், பிச்சி பூ -1200 ரூபாய்க்கு, அரளி பூ- 400 ரூபாய்க்கும், பட்டன்ரோஸ்-300 ரூபாய்க்கும், சம்பங்கி, செவ்வந்திப்பூக்கள் 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அண்மையில் வரத்துக் குறைவு காரணமாக தக்காளி விலை உச்சத்தை எட்டி இருந்த நிலையில், தற்போது மல்லிகை கிலோ 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு உச்சத்தை அடைந்துள்ளது.

flowers madurai Market
இதையும் படியுங்கள்
Subscribe