Advertisment

கொரோனாவிலிருந்து விடுபட வேண்டும்; தமிழ்நாடு கோயிலில் ஜப்பான் நாட்டினர் சாமி தரிசனம்!

 Japanese visted Vaideeswaran temple Sirkazhi

Advertisment

சீர்காழி மற்றும் வைத்தீஸ்வரன் கோயிலில் ஜப்பான் நாட்டினர் கொரோனாவிலிருந்து விடுபட வேண்டி சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டைநாதர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலைநாயகி, திருஞானசம்பந்தர் ஆகியோர் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோயிலுக்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

 Japanese visted Vaideeswaran temple Sirkazhi

Advertisment

இந்நிலையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பாலகும்ப குருமுனி என்கின்ற தக்கா யூகி என்பவர் தலைமையில் ஏராளமானோர் சீர்காழி சட்டைநாதர் கோயிலுக்கு நேரில் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கொரோனா தொற்றிலிருந்து அனைத்து மக்களும் விடுபட்டு நலமுடன் வாழ வேண்டி, நோய் தீர்த்த ஸ்தலங்களில் வேண்டி வருகின்றனர். இவர்களுக்கு கோயில் சார்பில் சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது.

அங்கிருந்து நவகிரக ஸ்தலமான வைத்தீஸ்வரன் கோயிலில் வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி அம்மன், தன்வந்திரி ஆகிய சந்ததிகளில் சிறப்பு வழிபாடு செய்தனர்.

Japan sirkazhi
இதையும் படியுங்கள்
Subscribe