Japanese company allocates Rs 1,500 crore to Madurai AIIMS

Advertisment

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ஜப்பானைச் சேர்ந்த ஜைக்கா நிறுவனம் முதற்கட்டமாக ரூபாய் 1,500 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம், தோப்பூரில் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க, கடந்த 2019- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இதுவரை ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியைக் கட்ட மொத்த திட்ட மதிப்பான ரூபாய் 1,977 கோடியில், தற்போது ரூபாய் 1,500 கோடியை ஜைக்கா நிறுவனம் ஒதுக்கியுள்ளதாகவும், மீதமுள்ள நிதியை வரும் அக்டோபர் மாதம் 26- ஆம் தேதிக்குள் ஒதுக்கீடு செய்யும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.