கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த ஆரோக்கிய தாஸ் (51) இவர் மத்திய துணைராணுவப்படை பாதுகாப்பு ரோந்து வாகன பொறுப்பாளராக ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீர் டால் ஏரி பகுதியில் பணி செய்து வருகிறார். சனிக்கிழமை நள்ளிரவில் பணியில் இருந்தபோது இறந்து கிடந்ததாக சிதம்பரத்தில் உள்ள அவரது குடும்பத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

Jammu and Kashmir

இதனைதொடர்ந்து சிதம்பரம் தாலூக்கா காவல் நிலையம் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் உதவியுடன் ஷம்மு காஷ்மீரில் ஆரோக்கியதாஸ்சுடன் பணியாற்றும் நண்பர்களை தொடர்பு கொண்டு விபரம் அறிந்தபோது .அவரது உடல் விமானம் மூலம் சென்னைக்கு வந்து பின் சிதம்பரம் அவரது வீட்டிற்கு கொண்டு வருவதற்கான விபரங்களை குடும்பத்தாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jammu and KashmirJammu and Kashmir

Advertisment

இன்று காலை அவரது உடல் சிதம்பரத்திற்கு வருவதாக தெரிகிறது. இறந்து போன ஆரோக்கிய தாஸுக்கு ஆரோக்கிய செல்வி (48) என்ற மனைவியும்' ஆகாஷ் (24) என்ற மகனும், 'சுபிக்க்ஷா (19) என்ற மகளும் உள்ளனர். கவர்னர் ரோஸ்ஸையாவிடம் 2015 ம் ஆண்டு சிறந்த பாதுகாப்பு பணிக்கான விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐ.நா அமைதி பாதுகாப்பு படைக்கு தேர்வு செய்யப்பட்டு நெதர்லாந்தில் 18 மாதங்கள் பணியாற்றியுள்ளார். அவரது உடல் திங்கள் மாலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் இதில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட துணைராணுவத்தில் இருந்து முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.