Advertisment

சில்லக்குடியில் ஜல்லிக்கட்டு ரத்து!

 Jallikkattu canceled in Chilakkudi!

தை திருநாளான இன்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழுமுடக்கம் என்பதால்மதுரை மாவட்ட ஆட்சியர் 17ஆம் தேதி அலங்காநல்லூரில்ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் சில்லக்குடியில் வரும் திங்கட்கிழமை அன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்துள்ளது. கரோனா அதிகரித்து வருவதால் ஜல்லிக்கட்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு சில்லக்குடியில் ஜல்லிக்கட்டு போட்டி அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டும் அதேபோல் அங்கு ஜல்லிக்கட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

jallikattu Perambalur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe