Advertisment

26 காளைகளை அடக்கி சிறந்த வீரராக தேர்வான 2 இளைஞர்கள்

jallikattu won by 2 members

உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, இன்றுதைத்திருநாளை முன்னிட்டு, அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள சிவகுருநாதசுவாமி கோவிலின் முன்பாக காலை 8 மணியளவில் கோலாகலமாகத் தொடங்கியது.

Advertisment

இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 430 வீரர்களும், 788 காளைகளும் பங்கேற்றனர். இதில் வெற்றி பெறுவோருக்கு நாற்காலி, வேஷ்டி, துண்டு, குடம், அண்டா, தங்க நாணயம் உள்ளிட்டவை அந்தந்த சுற்றுகளில் வெற்றி பெறும்வீரர்கள் மற்றும் காளையின் உரிமையாளருக்கு வழங்கப்படும் மற்றும் 8 சுற்றுகளாய் நடைபெறும் இந்தப் போட்டியில், ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளைப் பிடித்த வீரர் அடுத்த சுற்றுகளில் விளையாட அனுமதிக்கப்படுவார்.

Advertisment

இறுதியாக அதிக காளைகளைப் பிடித்த சிறந்த வீரருக்கும், பிடிபடாமல் விளையாடிய சிறந்த காளைக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக தலா ஒரு பைக் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில். வீரர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் தகுதி பெற்றவர்களே விளையாட அனுமதிக்கப்பட்டனர் மற்றும் தேவையான பாதுகாப்புகளுடன் சிறப்பாக நடந்து முடிவுபெற்றது.

அதில் மாட்டின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 58 பேர் காயம் அடைந்துள்ளனர்.இதன் 8 சுற்றுகள் நிறைவு பெற்ற நிலையில் 520 காளைகள், 420 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில்திருநாவுக்கரசு மற்றும் விஜய் ஆகியோர் 26 காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வாகியுள்ளனர்

avaniyapuram madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe