ADVERTISEMENT

பாடத்திட்டத்தில் ஜல்லிக்கட்டு... -அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

07:11 PM Jan 18, 2020 | kalaimohan

ஈரோட்டில் இன்று இரண்டாவது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பிறகு செய்தியாளர்களிடம் பேசும் போது,

ADVERTISEMENT

ADVERTISEMENT

"தமிழர்களின் பாரம்பரியமான வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்பட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து கல்வியாளர்கள், அறிஞர்கள் உள்ளிட்டவர்களோடு நடத்தப்படும் ஆலோசனைக்குப் பிறகு முடிவெடுக்கப்படும். ஏற்கெனவே கல்வியாளர்கள் நமது பாடத்திட்டம் சுமையாக இருப்பதாக கூறி வருவதால் ஜல்லிக்கட்டு குறித்து பள்ளி மாணவ, மாணவியர்களிடையே அதுபற்றி தெளிவுப்படுத்திடவும், விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் குறுந்தகடுகள் வழங்கப்படும்.

அதேபோல் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியதைப்போல் சேவல் சண்டைக்கும் அனுமதி வழங்குவதற்கு தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT