சேலம் கூலமேடு ஜல்லிக்கட்டு ஜனவரி 23- ல் நடக்கிறது!

jallikattu in salem district

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கூலமேட்டில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்தாண்டு ஜனவரி 17-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்து வந்ததால், போட்டி நடத்த ஜல்லிக்கட்டு மைதானம் ஏதுவாக இல்லை எனக்கூறி மாவட்ட நிர்வாகம் போட்டியை ஒத்திவைத்தது.

இந்நிலையில், வரும் ஜனவரி 23- ஆம் தேதி காலை 08.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்காக துறையூர், நாமக்கல், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சேலம், மதுரை மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 200 வீரர்கள் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

jallikattu PONGAL FESTIVAL Salem
இதையும் படியுங்கள்
Subscribe