jallikattu oxen are very happy in new year celebration in trichy 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கருங்குளம் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் நேற்று காலை புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் இந்தப் பகுதியைச் சுற்றி உள்ள கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்தப்பகுதியில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகளை புத்தாண்டு தினத்தன்று இந்த ஆலயத்துக்கு அழைத்து வந்து பங்குத்தந்தை மூலம் புனித நீர் தெளித்து ஆலயப் பிரசாதமான பச்சரிசி, வெல்லம், கொண்டைக்கடலை, கம்பு, எள், பொட்டுக்கடலை ஆகியவற்றின் கலவை அளிக்கப்பட்டது.

Advertisment

நூற்றுக்கணக்கான ஜல்லிக்கட்டு காளைகள் ஆலயத்திற்கு காலை முதல் வரத்தொடங்கிய நிலையில், ஆலயத்திற்கு அழைத்துச் சென்று அங்கு வழிபாடு முடிந்த நிலையில், வெளியே வரும் காளைகள் பொதுமக்களின் கூட்டத்தையும் விசில் சப்தத்தையும் கேட்டவுடன் அங்கிருந்த பொதுமக்களுடன் விளையாடத்தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

jallikattu oxen are very happy in new year celebration in trichy 

இருப்பினும் காளைகள் மூக்கணாங்கயிறு இட்டு கட்டப்பட்டு வளர்ப்பாளர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. காளைகளை வரவேற்க காளை பிரியர்களின்விசில் சத்தமும் காளைகளைக் குஷிப்படுத்தியதால்காளைகள் துள்ளிக்குதித்து மக்களுடன் விளையாடத்தொடங்கியதும் அப்பகுதி முழுவதும் ஜல்லிக்கட்டு நடந்தது போன்ற பரபரப்பை ஏற்படுத்தியது. இளைஞர்களும் காளைகளைப் போட்டிப் போட்டு அடக்கினர்.