Skip to main content

ஈரோட்டில் ஜல்லிக்கட்டு...

Published on 10/01/2020 | Edited on 11/01/2020

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு இரு வருடங்களுக்கு முன்பு நீதிமன்றம் மூலம் தடை ஏற்பட தமிழகமே கொந்தளித்தது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை தமிழக வீதிகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தன்னெழுச்சியான இளைஞர்களின் போர் சென்னை மெரினாவில் புரட்சியாக வெடித்தது. அதன் பிறகு தடை தகர்ந்தது. இதற்கு முன்னர் வரை தமிழகத்தில் சில ஊர்களில் மட்டுமே நடந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு தடையை உடைத்த புரட்சிக்குப் பிறகு ஒவ்வொரு ஊரிலும் களமாட தொடங்கியது. அப்படித்தான் சென்ற ஆண்டு முதல் முறையாக ஈரோட்டில் நடைபெற்றது. தொடர்ந்து இந்த ஆண்டும் வெகு சிறப்பாக நடக்கவுள்ளது. ஈரோடு பவளத்தாம்பாளையத்தில் உள்ள ஏ.இ.டி  என்ற பள்ளி மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆயத்தப் பணிகள்  நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு  பணிகளை அமைச்சர் செங்கோட்டையன்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
 

HNபிறகு அவர்  நிருபர்களிடம், "ஈரோட்டில் சென்ற முறை சிறப்பான முறையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.  அதைப் போன்று இந்த முறையும் இரண்டாவது முறையாக மிகவும் சிறப்பாக வருகிற 18ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது  இதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.  இந்த முறை கூடுதல் பாதுகாப்புடன் போட்டியை கண்டு களிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  இந்த முறை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ் உலகமே வியந்து பார்க்கும் வகையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  200 காளைகளுக்கு மேல் போட்டியில் பங்கேற்கும்" என்றார். அப்போதுபோது ஈரோடு கலெக்டர் கதிரவன்,  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், வர்த்தகர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன்,  எம்எல்ஏக்கள் கேவி ராமலிங்கம் கே எஸ் தென்னரசு சிவசுப்பிரமணி ஆகியோர்  உடனிருந்தனர்.
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆரவாரத்துடன் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி; மாடுபிடி வீரர்களை சுத்தவிட்ட காளைகள்

Published on 02/05/2024 | Edited on 02/05/2024
Jallikattu competition held in viralimalai which district of pudukottai

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று (01-05-24) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியில் பிரசித்தி பெற்ற மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலில் உள்ள தெய்வமானது விராலிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்களின் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் விளங்கி வருகிறது. இங்கு வருடம் தோறும் சித்திரை மாதத்தில் திருவிழாவிற்கு முன்பு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியானது நடத்துவது என ஊர் பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வாடிவாசல் அமைக்கும் பணியானது கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவு பெற்றதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஜல்லிக்கட்டு திடலைப் பார்வையிட்டு போட்டியை நடத்த அனுமதி அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று (01-05-24) காலை 8.20 மணிக்கு அ.தி.மு.க முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு விழாவை, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 725 ஜல்லிக்கட்டு காளைகளை வரிசையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. அதனை 164 மாடுபிடி வீரர்கள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிப் போட்டுக் கொண்டு அடக்கினர். 

Jallikattu competition held in viralimalai which district of pudukottai

தேர்தல் விதிமுறையின் காரணமாக இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் ஏதும் வழங்கப்படவில்லை. இதில் 13 மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் 12, மாட்டின் உரிமையாளர்கள் 15 மற்றும் ஒரு போலீஸ் என 41 பேர் காயமடைந்தனர். அதில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனைக்கும், 4 பேர் திருச்சி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற அனைவருக்கும் வாடிவாசல் அருகே அமைக்கப்பட்டு இருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டு விழாவில் விராலிமலை வட்டாட்சியர் கருப்பையா, வடக்கு மாவட்ட கவுன்சிலர் சிவசாமி, ஒன்றிய செயலாளர் பழனியாண்டி மற்றும் சர்வ கட்சியினர் கலந்து கொண்டு போட்டியினைக் கண்டு ரசித்தனர். பாதுகாப்பு பணியில் இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துகுமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story

விராலிமலையில் ஜல்லிக்கட்டு; விஜயபாஸ்கர் தலைமையில் நடப்பட்ட முகூர்த்தக்கால்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Muhurthakaal planting program for jallikattu competition at Viralimalai

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் சித்திரை மாத திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெறும். அதனையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியானது திருவிழாவிற்கு முன்பு நடைபெறும் பூச்சொரிதல் விழா அன்று வெகு விமர்சியாக நடைபெறும். ஆனால் இந்தமுறை தேர்தல் விதிமுறைகளின் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. அதனால் ஜல்லிக்கட்டு போட்டியின்றி  பூச்சொரிதல் விழா மட்டும் நடைபெற்றது.

தற்போது தேர்தல் முடிவடைந்ததையடுத்து ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தரவு கிடைத்ததையடுத்து  வருகின்ற 30-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனையடுத்து அதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியானது முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அதில் ஜல்லிக்கட்டு திடலில் உள்ள முகூர்த்தக் காலுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் செய்து நடப்பட்டது. இதில் விழா கமிட்டியினர், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பேரிகார்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணையை உடனடியாகப் பெற்றுத்தந்த விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு கமிட்டி நிர்வாகிகள், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.