ADVERTISEMENT

'ஜல்லிக்கட்டு வழக்குகள் வாபஸ்' - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

02:40 PM Feb 05, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று (04.02.2021) கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்கும் சட்டத்திற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் துவங்கப்படும் பல்கலைக்கழகத்திற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், கூட்டுறவு வங்கியில் 12,110 கோடி ரூபாய் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கூட்டுறவு வங்கிகளில் 16.43 லட்சம் விவசாயிகள் பெற்ற 12,110 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது காவலர்களைத் தாக்கியது, வாகனங்களுக்குத் தீவைத்தது தொடர்பான வழக்குகளைத் தவிர, மற்ற வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT