ADVERTISEMENT

ஜல்லிக்கட்டு வழக்கு; எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்த தமிழக அரசு

07:42 PM Nov 23, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசரச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த மனுக்கள் மீது நாளை விசாரணையைத் துவக்குகிறது உச்சநீதிமன்றம்.

முன்னதாக இந்த வழக்கு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியதை எடுத்துக் கூறினார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட அரசியல் சாசன அமர்வு எழுத்துப்பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாகத் தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதத்தை இன்று தாக்கல் செய்தது. அதில், ''ஜல்லிக்கட்டின் போது காளைகள் துன்புறுத்தப்படவில்லை. மிகவும் பாதுகாப்பான முறையில் போட்டிகள் நடத்தப்படுகிறது. பாரம்பரிய விளையாட்டுக்குத் தடை விதித்தால் தமிழ் கலாச்சாரம் அழியும் நிலைக்குத் தள்ளப்படும். விவசாயத்தையும், விவசாயிகளையும் போற்றும் வகையில் காலங்காலமாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. விலங்குகள் வதை என்ற பெயரில் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கக் கூடாது” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT