Advertisment

ஜல்லிக்கட்டு போட்டியில் 12 பேர் காயம்!

jallikattu avaniyapuram incident peoples

Advertisment

மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதில் மாடுபிடி வீரர்கள் 7 பேர், பார்வையாளர்கள் ஒருவர், மாடுகளின் உரிமையாளர்கள் 4 பேர் என மொத்தம் 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மூன்று சுற்றுகள் முடிவில் 217 காளைகள் அவிழ்த்து விடப்பட்டு 151 காளைகள் பிடிபடாமல் வெற்றிப் பெற்றுள்ளன.இதனிடையே, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்த தி.மு.க. கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை நேரில் பார்த்து வருகிறார்.

avaniyapuram jallikattu PONGAL FESTIVAL
இதையும் படியுங்கள்
Subscribe