Advertisment

அலங்காநல்லூரை கலக்கிய 'ராவணன்' காளை எஸ்.ஐ அனுராதாவிடம் வந்த கதை... வெளிவராத தகவல்கள்!

2020 ஜல்லிக்கட்டில்அவனியாபுரம் முதல் உலக புகழ் அலங்காநல்லூர் வரை களத்தில் நின்று கலக்கிய புதுக்கோட்டை எஸ்.ஐ அனுராதாவின் காளை ராவணன் பற்றி தான் ஊடகங்கள் முதல் சமூக வலைதளங்களிலும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடம் பேச்சாக உள்ளது.

Advertisment

இந்த காளை ராவணன் எஸ்.ஐ அனுராதாவுக்கு எப்படி வந்தது.. அதன் பின்னனி என்ன?

jallikattu 2020 ravanan bull...

நெம்மேலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அனுராதா.. பளு தூக்கி காமன் வெல்த் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டி வரை நூற்றுக்கணக்கான பதக்கங்களை குவித்தவர். அண்ணன் மாரிமுத்து படிப்பை துறந்து கூலி வேலை செய்து தன்னை இந்த அளவுக்கு உயர்த்தினார். விளையாட்டில் சாதித்ததால் தஞ்சை மாவட்டம் தொகூர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ ஆக பணிகிடைத்தது.

Advertisment

காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று வந்த அனுராதாவுக்கு பாராட்டுகள் குவிந்தது. அப்படித்தான் தஞ்சை நண்பர் வினோத் தன் மனைவியின் தோழியான அனுராதாவுக்காக தஞ்சை வத்திராயிருப்பு பாலச்சந்திரன் கிடையில் இனம்பெருக்கத்திற்காக வைத்திருந்த காளையை வாங்கி அனுராதாவுக்கு பரிசாக வழங்கி.. உனக்கும் இந்த காளையும் பெருமை சேர்க்கும் என்று சொல்லி கொடுத்தார்.

jallikattu 2020 ravanan bull...

8 மாதங்களுக்கு முன்பு தன் வீட்டுக்கு வந்த காளைக்கு அனுரதாவின் அண்ணன் மாரிமுத்து ராவணன் என பெயர் வைத்து குடும்ப பெண்களே சேர்ந்து வளர்த்தார்கள். மாரிமுத்து தன் காளையான அசுரனுடன் ராவணனுக்கும் பயிற்சி கொடுத்தார்.

அனுராதாவுக்கு பரிசாக கிடைத்த காளை என்பதால் அவரது பெயரிலேயே அவனியாபுரத்தில் முதன் முதலில் களமிறக்கினார்கள். களத்தில் நின்று விளையாடிய ராவணனை அந்த களமே பாராட்டியது. ஊடகங்களின் பார்வையும் ராவணன் மேல் பட்டது. சிறந்த காளை என்ற பெயரோடு வீட்டுக்கு வந்தது.

jallikattu 2020 ravanan bull...

அடுத்த நாள் உலகப் புகழ் அலங்காநல்லூரில் காலை 8.30 வரை அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன்களைப் பற்றியே பேச்சு இருந்த நிலையில் அதன் பிறகு அனுராதாவின் ராவணன் களமிறங்கி கலக்கியதும் நாள் முழுவதும் ராவணன் பேச்சு ஓடியது. அலங்காநல்லூரின் சிறந்த காளை ராவணன் தான் என்று ரசிகர்கள் முடிவு செய்துவிட்டனர். ஆனால் மாலை அறிவித்த போது ரசிகர்கள் துவண்டு போனார்கள். காரணம் ஜெர்ஜி இன காளைக்கு முதல் பரிசும் நாட்டு இன காளையான ராவணனுக்கு இரண்டாம் பரிசும் அறிவித்தார்கள். நாட்டினத்தை காக்கத்தான் ஜல்லிக்கட்டு போராட்டமே நடந்தது. ஆனால் அரசின் முடிவு மாற்றி கலப்பினப் பக்கம் போகிறது என்ற சர்ச்சை எழுந்தது.

ஆனாலும் ராவணன் தமழகத்தின் அத்தனை பெரிய வாடிவாசலிலும் நின்றுா கலக்குவான். அடுத்து கோவை, விராலிமலை ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக வருவான் என்கிறார் காளைக்கு பயிற்சி கொடுக்கும் அனுராதாவின் அண்ணன் மாரிமுத்து.

இந்தநிலையில் புதுக்கோட்டை வடமலாப்பூர் ஜல்லிக்கட்டில் எஸ்.ஐ அனுராதாவின் மற்றொரு காளை அசுரன் நின்று ஆடியது சிறப்பு. பரிசாக வந்த ராவணன் பரிசுகளை அள்ளிக் குவிப்பதில் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Pudukottai PONGAL FESTIVAL jallikatu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe