Skip to main content

ஜல் ஜீவன் மிஷன் கூட்டு குடிநீர் திட்டம் ! விரைவுப்படுத்த அமைச்சர் வேலுமணி நடவடிக்கை!

Published on 13/11/2020 | Edited on 13/11/2020

 

Jal Jeevan Mission Joint Drinking Water Project! Minister Velumani action to expedite!

 

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நிதித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாக அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்.டத்தில்,  முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி கரூர், ஈரோடு, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய 6 மாவட்டங்களில் ரூ 1,347 கோடி மதிப்பில் 7 கூட்டு குடிநீர் திட்டங்களை ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை விரைவுபடுத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டார். 


இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் வேலுமணி, "தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட நீர் மேலாண்மை திட்டங்களால் பொதுமக்கள் மற்றும் விவசாய பெருங்குடி மக்களின் தண்ணீர் தேவை  பூர்த்தி செய்யப்படுகிறது. தமிழகத்தின் நீர் மேலாண்மை திட்டங்களை பாராட்டும் வகையில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகத்தின் சார்பில் இந்தியாவிலேயே நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலம் என்ற முதல் விருதினை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. 


முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் படி,  ஊரக பகுதிகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கரூர், ஈரோடு, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய 6 மாவட்டங்களில்  உள்ள ஊரகப் பகுதிகளில் 8.24 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ 1347.05 கோடி மதிப்பில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்க 7 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அரசின் நிர்வாக அனுமதி பெற்று செயல்படுத்தப்பட உள்ளது. 

 
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, கந்திலி , திருப்பத்தூர் மற்றும் நாட்றாம்பள்ளி ஒன்றியங்களில் உள்ள 759 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க பராமரிப்பில் இருக்கும் வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் தொழிற்சாலை தேவை பங்கீட்டிலிருந்து குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இக்கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.182.09 கோடியாகும். இத்திட்டத்தினை ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் செயல்படுத்த மாநில அளவிலான திட்ட ஒப்புதல் குழுவின் பரிந்துரை பெறப்பட்டுள்ளது. 


இத்திட்டத்திற்கு அரசின் நிர்வாக ஒப்புதல் பெற்று திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 2 லட்சத்து 21 ஆயிரம் மக்கள் பயனடைவர். 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியத்தில் உள்ள 3 ஊராட்சிகளைச் சேர்ந்த 9 குடியிருப்புகளும், திருப்பனந்தாள் ஒன்றியத்தில் உள்ள 11 ஊராட்சிகளைச் சேர்ந்த 29 குடியிருப்புகளும், திருவிடைமருதூர் ஒன்றியத்தில் உள்ள 9 ஊராட்சிகளைச் சேர்ந்த 29 குடியிருப்புகளும், திருவிடைமருதூர் பேரூராட்சியில் உள்ள 1 குடியிருப்பு மற்றும் வேப்பத்தூரில் உள்ள 1 குடியிருப்பு என மொத்தம் 67 குடியிருப்புகள் என ஊரக வளர்ச்சித் துறை குடியிருப்புக் கணக்கின்படி, கண்டறியப்பட்டு ஒரு புதிய கூட்டுக் குடிநீர் திட்டம், கொள்ளிடம் ஆற்றினை ஆதாரமாகக் கொண்டு திட்ட மதிப்பீடு ரூ.117.09 கோடிக்குத் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 0.77 லட்சம் மக்கள் பயனடைவர். 
 


தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 31 ஊரகக் குடியிருப்புகள், திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 18 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் முக்கூடல் பேரூராட்சிக்குட்பட்ட களியங்குளம் குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்க கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்திற்கான திட்ட மதிப்பீடு ரூ.50.50 கோடிக்கு தயாரிக்கப்பட்டுள்ளது இத்திட்டத்தின் மூலம் 0.43 லட்சம் மக்கள் பயனடைவர். 
 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 756 ஊரகக் குடியிருப்புகளுக்கு தற்போது பயனில் உள்ள 101 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம், 378 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம், ப்ளூரைட் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் வெள்ளகோவில் காங்கேயம் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகிய 4 கூட்டுக் குடிநீர் திட்டங்களை மறு கூட்டமைப்பு செய்து குடிநீர் வழங்கவும் மற்றும் காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் அமைத்து குடிநீர் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு திட்ட மதிப்பீடு ரூ. 440.63 கோடிக்குத் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், 1 லட்சத்து 58 ஆயிரம் மக்கள் பயன்பெறுவர்.
 

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் அமைந்துள்ள 8 ஊராட்சிகளுக்குப்பட்ட 197 ஊரகக் குடியிருப்புகளுக்கு புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்திட்டத்தில், தொலைவில் உள்ள 2 ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கும் சாத்தியக்கூறு இல்லாததால், கோபிசெட்டிபாளையம் மற்றும் நம்பியூர் ஒன்றியங்களிலுள்ள 6 ஊராட்சிகளில் மொத்தம் உள்ள 133 குடியிருப்புகளில், ஆற்றுக்குடிநீர் விநியோகம் இல்லாத 40 குடியிருப்புகள் மற்றும் ஏற்கெனவே கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பயன்பெறும் 56 குடியிருப்புகளையும் சேர்த்து மொத்தம் 96 ஊரகக் குடியிருப்புகளுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் குடிநீர் விநியோகிக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு ரூ.56.94 கோடிக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், 48 ஆயிரம் மக்கள் பயன்பெறுவர்.


ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகளில் அமைந்துள்ள 442 ஊரகக் குடியிருப்புகளுக்கு தற்போது பயனில் உள்ள அரச்சலூர் அவல்பூந்துறை கூட்டுக் குடிநீர் திட்டம், மொடக்குறிச்சி கூட்டுக் குடிநீர் திட்டம் (பழையது), மொடக்குறிச்சி கூட்டுக் குடிநீர் திட்டம் (புதியது), முத்தம்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் சுப்பராயவலசு கூட்டுக் குடிநீர் திட்ட.ம் ஆகிய 5 கூட்டுக் குடிநீர் திட்டங்களை மறு கூட்டமைப்பு செய்து குடிநீர் வழங்கவும் மற்றும் காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் அமைத்து குடிநீர் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு ரூ.412.12 கோடிக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், 2 லட்சத்து 39 ஆயிரம் மக்கள் பயன்பெறுவர்.


ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஓன்றியத்தில் உள்ள 10 ஊராட்சிகளில், 144 ஊரகக் குடியிருப்புகளுக்கு தற்போது பயனில் உள்ள அரச்சலூர் அவல்பூந்துறை கூட்டுக் குடிநீர் திட்டம், தேவம்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டம், எழுநூத்திமங்கலம் கூட்டுக் குடிநீர் திட்டம், புரவிபாளையம் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் வெள்ளக்கோயில் காங்கேயம் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகிய 5 கூட்டுக் குடிநீர் திட்டங்களை மறு கூட்டமைப்பு செய்து குடிநீர் வழங்கவும் மற்றும் காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் அமைத்து குடிநீர் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், 38 ஆயிரம் மக்கள் பயன்பெறுவர்" என்று விவரித்திருக்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.