Jain caught pretending to ask for address; CCTV footage released, shocking

சென்னையில் தனியாக சென்று கொண்டிருந்த இளம் பெண்ணிடம் அட்ரஸ் கேட்பது போல் விசாரித்த இளைஞர் திடீரென பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு சென்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை துரைப்பாக்கம் அதிக ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தனியாக இளம்பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் அப்பெண்ணிடம் அட்ரஸ் கேட்பது போன்று விசாரிக்க ஆரம்பித்தார். பெண்ணும் அவருக்கு நின்று பதில் சொல்லும் வகையில் பேசிக் கொண்டிருந்த நிலையில். திடீரென எதிர்பாராத நேரத்தில் அந்த இளைஞன் பெண்ணின் கழுத்தில் இருந்த நகையைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் கிளம்பினார். இந்த காட்சி அந்தப் பகுதியில் இருந்த குடியிருப்பு ஒன்றின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக பெண் கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு அந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

Advertisment