Advertisment

கைதியின் மனைவியிடம் அத்துமீறல்; சிறை வார்டன் சஸ்பெண்ட்

Jail warden suspended

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் உள்ள சிவக்குமாரை சந்திப்பதற்கு அவருடைய மனைவி முருகேஸ்வரி அடிக்கடி சிறைக்கு வந்து சென்றுள்ளார். அப்பொழுது சிறையின் வார்டன்விஜயகாந்த் என்பவருடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இந்த அறிமுகத்தைப் பயன்படுத்திக் கொண்ட வார்டன்விஜயகாந்த், அவருடைய செல்போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டு அவரிடம் அடிக்கடி வீடியோ காலில் பேசியுள்ளார். ஒருகட்டத்தில் அவர் பாலியல் ரீதியாக அத்துமீறி பேசிய நிலையில், இது தொடர்பாக சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத்திடம் முருகேஸ்வரி புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர்,விஜயகாந்த் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து சிறை வார்டன் விஜயகாந்த்தை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார் சிறை கண்காணிப்பாளர் வினோத்.

Advertisment

Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe