Advertisment

கைதிக்கு லிப்ட் கொடுத்த சிறை வார்டன் சஸ்பெண்ட்

 Jail warden suspended for giving lift to prisoner

ஆயுள் தண்டனை கைதிக்கு இருசக்கர வாகனத்தில் லிப்ட் கொடுத்த சிறை வார்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

அண்மையில் சேலம் மத்திய சிறையில் சிறைவாசி ஒருவரின் மனைவியின் செல்போன் நம்பரை வாங்கிக்கொண்டு அவரை தொடர்பு கொண்டு வீடியோ காலில் வருமாறும், ஆபாசமாகவும் பேசிய சிறை வார்டன் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதே சேலம் மத்திய சிறையில் மீண்டும் ஒரு வார்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

சென்னையைச் சேர்ந்த ஆயுள் தண்டனை கைதியான ஹரிகிருஷ்ணன் என்பவரை இருசக்கர வாகனத்தில் அமர வைத்து பேருந்து நிலையத்தில் சிறை வார்டன் ஒருவர் இறக்கி விட்டது தொடர்பான சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி இருந்தது. இது தொடர்பாக சிறைவார்டன் ராமகிருஷ்ணன் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கைதி ஹரிகிருஷ்ணன் பரோலில் சென்று மீண்டும் சேலம் சிறைக்கு செல்ல இருந்த நிலையில் திடீரென மாயமானார். இதையடுத்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை சிறை கண்காணிப்பாளர்கள் வினோத் ஆய்வு செய்தபோது சிறைவார்டன் ராமகிருஷ்ணன் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கொடுத்து பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டது தெரிய வர அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Prison Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe