Advertisment

நீண்டகால ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யக்கோரி சிறை நிரப்பும் போராட்டம்

Jail-filling struggle for early release of long-term lifers

நீண்டகால ஆயுள் சிறைவாசிகளை தமிழக அரசு முன் விடுதலை செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில், சேலம் மத்திய சிறை முன்பு சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

Advertisment

அரசியல் சாசன சட்டம் தந்துள்ள 161-வது பிரிவை பயன்படுத்தி தமிழக சட்டமன்றத்தில் இது குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை இதில் முன்வைக்கப்பட்டது. மேலும் இச்சிக்கல் தீரும்வரை சம்மந்தப்பட்ட சிறைவாசிகளுக்கு நீண்ட சிறைவிடுப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. வழக்கு, சாதி மற்றும் மதத்தின் பெயரால் இதில் பாரபட்சம் காட்டப்படக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.

Advertisment

தலைமை ஒருங்கிணைப்பாளர் கேப்டன் செய்யது முகம்மது பாருக்தலைமையில் நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டத்தை இணை பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயீ உரையாற்றி தொடங்கி வைத்தார். துணைப்பொதுச்செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் அவர்கள் முழக்கங்களை எழுப்பினார். aமஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு ஆகியோர் கோரிக்கை உரையாற்றினர்.

Prisoners protest
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe