Skip to main content

கண்திருஷ்டி நீங்க ஜக்கி செய்த வேலை?

Published on 29/07/2019 | Edited on 30/07/2019

 

திடீரென பேஸ்புக்கில் ஜக்கி உடல்நலம் சரியில்லாமல் ஆஸ்திரேலியாவில் படுத்துக்கொண்டிருப்பதாக ஒரு செய்தி பரவியது. அதில், ஜக்கி சோர்ந்த தோற்றத்துடன் மருத்துவமனையில் உள்ள ஒரு கட்டிலில் படுத்திருப்பதாக ஒரு புகைப்படமும் வெளியானது. இது இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. இது உண்மையா என பலரும் விசாரிக்க தொடங்கினார்கள். 

 

jaggi


ஆசிரம வட்டாரங்களை விசாரித்தபோது, ஜக்கி எப்போதும் போல அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் என்ற தகவலே வெளிவந்தது. 
 

ஏன் திடீரென்று ஜக்கிக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல்கள் வரவேண்டும் என்ற கேள்வியை ஆசிரமவாசிகள் மத்தியில் கேட்டால், ”கலைஞருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லை என்று செய்தி வரும். அவர் நீண்ட காலம் வாழ்ந்தார். அதேபோல் ஜக்கிக்கு உடல்நிலை சரியில்லை என்று வந்தால், அவருக்கு இப்பொழுது அடைந்திருக்கும் புகழால் ஏற்பட்ட திருஷ்டி கழிந்துவிடும் என்பதால் இந்த செய்தி பரவியது. இதில் எது உண்மை என்று ஜக்கிதான் விளக்க வேண்டும்” என்கிறார்கள். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கல்விக்காக சரஸ்வதி எதையும் செய்யவில்லை” - புகைப்படம் வைக்க மறுத்த ஆசிரியர் மீது அதிரடி நடவடிக்கை

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Action taken against teacher who refused to post photo god Saraswati

ராஜஸ்தான் மாநிலம், பாரான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேம்லதா பைர்வா. இவர் கிஷன்கஞ்ச் பகுதியில் உள்ள லக்டாய் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதியான குடியரசு தின நாளில், பள்ளியில் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் உள்ளூர் மக்களும் பங்குபெற்றனர்.

அப்போது, விழா மேடையில், மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் புகைப்படங்களுக்கு அருகே கடவுள் சரஸ்வதியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் அந்த ஆசிரியரிடம் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அவர்கள் வைத்த கோரிக்கையை, ஆசிரியர் ஹேம்லதா பைர்வா ஏற்க மறுத்துள்ளார். இதனால், இருதரப்பினருக்கும் வாக்குவாதம் எழுந்தது. அந்த சமயத்தில், ‘கல்விக்காக சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பும் செய்யவில்லை’ என்று ஆசிரியர் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த 22ஆம் தேதி, ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் மதன் திலாவர், கிஷன்கஞ்ச் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். அதில் அவர், “சிலர் பள்ளிகளில் சரஸ்வதி தேவியின் பங்களிப்பு என்ன? என்று கேட்கிறார்கள். சொல்லி இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவரை நான் சஸ்பெண்ட் செய்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். 

கல்வி அமைச்சரின் இந்த அறிவிப்புக்குப் பின், மாவட்டக் கல்வி அதிகாரி பியூஷ் குமார் சர்மா, ஆசிரியர் ஹேம்லதா பைர்வாவை பணி இடைநீக்கம் செய்து அதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளார். 

Next Story

பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு விடை கொடுத்த எம்.பி.க்கள்!

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

MPs farewell to the old parliament building

 

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் வரும் 22 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வுகள் வழக்கம்போல் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து இன்று முதல் (19.9.2022) முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ள சிறப்பு கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று  புதிய நாடாளுமன்றத்தில் முதல் அமர்வு நடைபெற உள்ளது.

 

இந்நிலையில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு விடை கொடுக்கும் வகையில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு முன்பு மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் 750 பேர் தனித்தனியாகவும் குழுவாகவும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லீகார்ஜூன கார்கே, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது பாஜக எம்.பி.நர்க்ஹாரி மயங்கி விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வை தொடர்ந்து பிரதமர் மோடியுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய நாடாளுமன்றத்திற்குள் செல்ல உள்ளனர். இதையடுத்து புதிய நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்ற உள்ளனர்.