திடீரென பேஸ்புக்கில் ஜக்கி உடல்நலம் சரியில்லாமல் ஆஸ்திரேலியாவில் படுத்துக்கொண்டிருப்பதாக ஒரு செய்தி பரவியது. அதில், ஜக்கி சோர்ந்ததோற்றத்துடன் மருத்துவமனையில் உள்ள ஒரு கட்டிலில் படுத்திருப்பதாக ஒரு புகைப்படமும் வெளியானது. இது இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. இது உண்மையா என பலரும் விசாரிக்க தொடங்கினார்கள்.

Advertisment

jaggi

ஆசிரம வட்டாரங்களை விசாரித்தபோது, ஜக்கி எப்போதும் போல அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் என்ற தகவலே வெளிவந்தது.

Advertisment

ஏன் திடீரென்று ஜக்கிக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல்கள் வரவேண்டும் என்ற கேள்வியை ஆசிரமவாசிகள் மத்தியில் கேட்டால், ”கலைஞருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லை என்று செய்தி வரும். அவர் நீண்ட காலம் வாழ்ந்தார். அதேபோல் ஜக்கிக்கு உடல்நிலை சரியில்லை என்று வந்தால், அவருக்கு இப்பொழுது அடைந்திருக்கும் புகழால் ஏற்பட்ட திருஷ்டி கழிந்துவிடும் என்பதால் இந்த செய்தி பரவியது. இதில் எது உண்மை என்று ஜக்கிதான் விளக்க வேண்டும்” என்கிறார்கள்.