Skip to main content

தேசிய கல்விக் கொள்கை குறித்து ஜெகத்ரட்சகன் கேள்வி... பதிலளித்த மத்திய கல்வித்துறை அமைச்சர்!

Published on 11/08/2021 | Edited on 11/08/2021

 

Jagathratsagan Question on National Education Policy; Union Education Minister who responded

 

திராவிட முன்னேற்ற கழக அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன் (09.08.2021) அன்று, மக்களவையில் குழுக் கல்வி முறையை வளர்த்தெடுக்க திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா? என்றும், தேசியக் கல்வி கொள்கையில் உயர் கல்வியில் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை வரும் 2035ஆம் ஆண்டிற்குள் அதிகரிக்க ஏதேனும் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளனவா? என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் விரிவான கேள்வியை எழுப்பினார்.

 

அதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் கூறியதாவது, “குழுக்கல்வி முறையை, கூகுள் போன்ற செயலிகள் மூலம் வளர்த்தெடுக்க 25,000க்கும் அதிகமான பேராசிரியர்களுக்கு உரிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, வகுப்பறைகளில் பயன்படுத்தும் வகையில் ஆவணம் செய்யப்பட்டுள்ளது. மேலும், வருகின்ற 2035ஆம் ஆண்டிற்குள் உயர் கல்வியில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் 50 விழுக்காட்டை அடையும் வகையில் திறந்தவெளி, தொலைத் தொடர்பு மற்றும் இணையவழி கல்வி முறையை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன், மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு உரிய முறைகளை வகுத்துள்ளது. அனைத்திந்திய தொழிற்கல்வி குழுமம் (ICTE) வாயிலாகவும் உரிய கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு, இவ்விதிமுறைகள் அனைத்தும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.” இவ்வாறு கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்