புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும், சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடியதால் கடந்த 17 ந் தேதி கனிம கொள்ளையர்களால் மினி லாரியை 2 முறை மோதி படுகொலை செய்தனர்.
இந்த வழக்கில் ஆர் ஆர் கிரஷர் உரிமையாளர்கள் ராமையா, ராசு, ராசு மகன் தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம், லாரி ஓட்டுநர் காசிநாதன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை அடுத்து திருமயம் காவல் ஆய்வாளர் குணசேகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார், வட்டாட்சியர் புவியரசன் பணியிட மாறுதல் செய்யப்பட்டார். கனிமவளத்துறை ஏ.டி லலிதா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெகபர் அலியின் உடற்கூறாய்வு சரியாக செய்யப்படவில்லை அதனால் மறு பிரேதப்பரிசோதனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஜெகபர் அலியின்மனைவி சார்பில்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் ஜெகபர் அலி உடலை தோண்டி எடுத்து எக்ஸ்ரே எடுக்க உத்தரவிட்ட நீதிபதி பின்பற்றப்பட வேண்டிய சில விதிமுறைகளையும் கூறியிருந்தார்.
அதன்படி வெள்ளிக்கிழமை திருமயம் வட்டாட்சியர் ராமசாமி, சிபிசிஐடி போலீசார் முன்னிலையில் ஜெகபர் அலி உடல் தோண்டி எடுக்கப்பட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கொண்டு வந்திருந்த எக்ஸ்ரே இயந்திரம் மூலம் ஜெகபர் அலி உடலை எக்ஸ்ரே எடுத்தனர். மேலும் நீதிபதி உத்தரவுப்படி அங்கு வேறு நபர்கள் அனுமதி அளிக்கவில்லை. படங்கள் எடுப்பதும் தடை செய்யப்பட்டிருந்தது. மறைப்பு வைக்கப்பட்டு பரிசோதனைகள் நடந்தது. இந்த பரிசோதனை முடிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-01/a2389.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-01/a2387.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-01/a2388.jpg)